Posts

சிலப்பதிகாரம்

  சிலப்பதிகாரம்   தமிழில்  எழுதப்பட்ட  ஐம்பெருங் காப்பியங்களில்  ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம்.  பொ.ஊ.  இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம்  கோவலன்  என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர்  இளங்கோ அடிகள்  என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன்  செங்குட்டுவனுடைய  தம்பி எனக் கருதப்படுகின்றது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். [1] நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது. [2] மலையாள மொழி [3]   பொ.ஊ.  ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது. ...